பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரைநிகழ்த்துகிறார்.
பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர்கள் விவகாரம், ராகுல் காந்தி யாத்திரை மீதான தாக்குதல், ஹேமந்த் சோரன் மற்றும் லாலு பிரசாதுக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி எதிர்கட்சிகளிடம் அரசுதரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜோஷி தெரிவித்தார்.
Comments