மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் : அமைச்சர் சிவசங்கர்

0 694

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் இயங்கத் தொடங்கிய நிலையில், வடசென்னையில் வசிக்கும் மக்களின் வசதிக்காக மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

வடசென்னை மக்கள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்திற்கு செல்ல சிரமம் ஏற்பட்டதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் முப்பதிலிருந்து ஒரு மணி நேர இடைவெளியில் 160 பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

பேருந்து சேவையை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், பயணிகளின் வருகைக்கு ஏற்பட மாதவரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments