திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி யாக பூஜை
கும்பகோணம் அடுத்த திருபுவனம் அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் வரும் 2ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், முதல் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் முன்னிலையில் நடைபெற்ற மகா பூர்ணாஹதியையும், மகா தீபாராதனையையும் திரளானோர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல் வரும் ஒன்றாம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் தன பூஜை உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.
Comments