சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

0 795

25 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கடனை மீட்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களை கட்டியுள்ள எவர்கிராண்டில், எலான் மஸ்க், பில் கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்கள் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

உலகளவில், அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் வரிசையில் 2-ம் இடத்தில் இருந்த எவர்கிராண்ட் நிறுவனம், 2021-ஆம் ஆண்டு சீன அரசு கொண்டுவந்த புதிய விதிமுறைகளால், தள்ளுபடி விலைக்கு கட்டடங்களை விற்றதுடன், விற்காத பல அடுக்குமாடி கட்டடங்களை வெடி வைத்து தகர்த்தது.

இதனால் நஷ்டமடைந்து, பல மாதங்களாக கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல முறை அவகாசம் அளித்தும் கடனை அடைப்பது குறித்து  விளக்கம் அளிக்கப்படாததால் அந்நிறுவனத்தை கலைத்து, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அதன் சொத்துக்களை விற்று கடனை மீட்குமாறு ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments