உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ரூ.330 கோடி ஊழல்
உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 330 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பல இடங்களில் உளவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருந்த நிலையில், ராணுவத்துக்கு பீரங்கி குண்டுகளை வழங்க “யவ்யூ அர்செனல்” என்ற ஆயுத நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் மேலாளர்களும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இணைந்து 330 கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்துள்ளதாக உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
Comments