கூடலூரில் கூகுள் மேப் காட்டிய பாதையில் காரை ஓட்டி சென்ற இளைஞர்கள்... செங்குத்தான படிக்கட்டுகளில் சிக்கி தவிப்பு

0 969

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா வந்த கர்நாடக மாநில இளைஞர்கள் Google Map-ல் காட்டிய பாதையை நம்பி சென்றதில், செங்குத்தான படிகட்டுகளில் தங்களது காரை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

செங்குத்தான படிக்கட்டுகள் இருந்ததைப் பார்த்த அந்த கார் ஓட்டுநர் காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தியதால், காரில் இருந்து இறங்கி என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர்.

அப்பகுதிவாசிகளும், பிற சுற்றுலா பயணிகளும் ஒன்று சேர்ந்து படிக்கட்டுகளில் பாறை துண்டுகளை அடுக்கி வைத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments