தூத்துக்குடியில் ஊருக்குள் வராத பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்துக்காக தனியார் பேருந்தை சிறைப்பிடித்த ஸ்ரீவைகுண்டம் பொதுமக்கள், பேருந்தில் பயணித்தவர்களிடம் மன்னிப்பு கோரினர். தங்கள் ஊருக்குள் பேருந்து வராததைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து இல்லாமல் தினமும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் தனியார் பேருந்தை சிறை பிடித்து திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர்.
Comments