துருக்கி கிறித்துவ தேவாலயத்தின் சண்டே மாஸ் நிகழ்ச்சியில் தீவிரவாதத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள இத்தாலிய பாரம்பரியத்தை கொண்டகிறித்துவ தேவாலயத்தில் ஆயுதம் ஏந்திய 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி ஏர்லிகயா, உயிரிழந்தவரின் பெயரை வெளியிட்டார். சுமார் 50 பேர் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காக கூடியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Comments