திருவொற்றியூர் கடலில் மாயமான மேலும் இரண்டு சிறுவர்கள் சடலமாக மீட்பு
சென்னை திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மேலும் இரண்டு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடலில் மூழ்கிய வியாசர்பாடியை சேர்ந்த நான்கு சிறுவர்களில் ஒருவரை அங்கிருந்த மீனவர் உயிருடன் மீட்டார்.
மற்றொரு சிறுவனை சடலமாக மீட்புக் குழுவினர் மீட்டனர்.
மாயமான இரண்டு சிறுவர்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் பைபர் படகில் சென்று தேடிய நிலையில், பல மணி நேர முயற்சிக்கு பிறகு இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது.
Comments