பறவைகள் சரணாலயத்தில் 2 நாட்களாக கணக்கெடுப்பு பணி ஆஸ்திரேலியா வழியாக வலசை வரும் பிளமிங்கோ பறவைகள் தனுஷ்கோடிக்கு இந்த ஆண்டு வரவில்லை

0 651

குஜராத் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியா வழியாக வலசை வரும் பிளமிங்கோ பறவைகள் தனுஷ்கோடிக்கு இந்த ஆண்டு வரவில்லை என்று பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தனுஷ்கோடி, முனைக்காடு, வாலிநோக்கம், சித்திரங்குடி, தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் ஆகிய சரணாலயங்களில் கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

கண்மாய்களில் 75 சதவீதம் தண்ணீர் உள்ள நிலையிலும், டிசம்பர் முதல் மார்ச் மாதம் இறுதி வரையில் வர வேண்டிய பிளமிங்கோ பறவை ஒன்றைக் கூட காணவில்லை எனவும், இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பறவை ஆர்வலர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments