மெக்சிகோவில் தனியே பராமரிக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி இடமாற்றம்
மெக்சிகோ நாட்டில் வட எல்லையில் தனிமையில் தவித்து வந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று, தென் எல்லையில் உள்ள வன விலங்கு சரணாலயத்துக்கு மாற்றப்பட்டது.
சியூடாட் ஹுவாரெஸ் என்ற மெக்சிகோவின் வடக்கு எல்லைப்புற நகரில் 7 மாத காலம் கூண்டு ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பெனீட்டோ என்ற ஒட்டகச்சிவிங்கியை வேறு வன விலங்கு சரணாலயத்துக்கு மாற்றுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று ஒட்டகச்சிவிங்கியை வாகனத்தில் ஏற்றி சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தென் எல்லையில் உள்ள பியூப்லா நகர சரணலாயத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இதர ஒட்டகச் சிவிங்கிகளுடன் பெனீட்டோ ஒட்டகச்சிவிங்கியும் தற்போது இணைந்து வசிக்கத் துவங்கியுள்ளது.
Comments