மாணவரை காலணியால் கடுமையாகத் தாக்கிய பாகிஸ்தான் பாடகர்... காணொளி வெளியானதால் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்

0 735

பாகிஸ்தானில் பிரபல பின்னணி மற்றும் கவ்வாலி இசைப் பாடகரான ராஹத் பதே அலி கான், தனது வீட்டில் ஒருவரை காலணியால் கடுமையாகத் தாக்கும் காணொளி வெளியானது.

அந்த நபர் தனது மாணவர் நவீத் ஹஸ்னைன் என்றும், இது தனக்கும் தனது மாணவருக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்னை என்றும் கூறிய பாடகர், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

மதகுரு ஒருவரால் மந்திரங்கள் ஏற்றப்பட்ட புனித நீர் உள்ள பாட்டிலை எங்கோ மறந்து வைத்துவிட்டதால் அது கேட்டு தன்னை ஆசிரியர் கண்டித்ததாகவும், அவரது நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

ராஹத் பதே அலி கான், பிரபல பாடகர் உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கானின் உறவினர் என்பதும், ஹாலிவுட் மற்றும் ஹிந்திப் படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments