இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் இன்சாட் 3 DS தயாரானது... வானிலை நிலம் கடல் ஆய்வுகளுக்காக விண்ணில் செலுத்தப்படுகிறது.
இஸ்ரோவின் வானிலை ஆய்வுக்கான புதிய செயற்கைக்கோள் இன்சாட் 3 DS ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் செயற்கைக்கோள் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வானிலை மாற்றங்கள் புயல் மழைபோன்ற இயற்கைப் பேரிடர்களை கண்டறிய பயன்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நேற்று இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தாவன் விண்வெளிமையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஜிஎஸ்எல்வி F 14 ராக்கெட் மூலமாக இது விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
Comments