நிதி கொடுத்தால் ராகுல் காந்தி கையெழுத்திட்ட டி-சர்ட் பரிசு... ராகுலின் பாரத ஒற்றுமை நியாய நடைபயணத்துக்கு நிதி திரட்ட காங்கிரஸ் திட்டம்

0 1264

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நியாய நடைபயணத்தின்போது, 670 ரூபாய் அல்லது அதற்கு மேலும் நிதி கொடுத்தால் ராகுல் காந்தி கையெழுத்திட்ட டிசர்ட்டை பரிசாக வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நியாயத்துக்கு நிதி வழங்குங்கள் என்ற தலைப்பில் நிதி திரட்டும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி வழங்குபவர்களுக்கு டிசர்ட் அல்லது ராகுல் கைப்பட எழுதிய கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பிரசார தொடக்க நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பொருளாளர் அஜய் மக்கான் இதைத் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments