அப்படி போடு.. போடு.. முதல்ல நீ ஜிப்ப போடு..! மில்லியால் வீதிக்கு வந்த கில்லி..! மரியாதை கேட்டு குப்புற விழுந்த விஜய் ரசிகர்

0 1650

விஜய் ரசிகர் என்று கூறி போதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர் ஒருவர், மரியாதை கொடுக்கும்படி கூறி சாலையில் குப்புற விழுந்த நிலையில், 108 ஆம்புலன்ஸை வர வழைத்த காவல்துறையினர், அவரை ஸ்டெச்சரில் ஏற்றி மரியாதையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதையில் சாலையில் நின்று தள்ளாடிய இளைஞரை பார்த்து போகும்படி எச்சரித்த போலீசாரிடம், மரியாதை முக்கியம் என்று கேட்டு வாங்கும் இவர்தான் விஜய் ரசிகர் கில்லி..!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மேற்கு பகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.புரம் விலக்கில் மதுபோதையில் தள்ளாடியபடி இளைஞர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அவரது அருகில் சென்று போலீசார் விசாரித்த போது தான் கொஞ்சமாக குடித்திருப்பதாகவும், தன்னை விஜய் ரசிகர் எனக்கூறிக்கொண்டு கில்லிப்படத்தில் வரும் அப்படி போடு.. போடு... என்ற பாடலை காவலரை நோக்கி கிண்டலாக பாடினார், இடைமறித்த காவலரோ முதல்ல நீ பேண்டுல ஜிப்ப போடு என்று கூற பதறிபோய் ஜிப்ப போடும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த இளைஞர்..

எங்க போகனும் என்ற போலீஸிடம், தனக்கு மார்த்தாண்டம் என்று கூறிய அந்த இளைஞர் நடக்க ஆடம்பித்தார்... பார்த்து போடா என்று போலீசார் சொன்னதும், மரியாதை முக்கியம்..! ஏன்னா நான் விஜய் ரசிகர் என்றதோடு, உன்னால் முடியும்.. உன்னால் முடியும்.. தோழா.. என்று பாடியவாறே சாலையோரம் நடக்க ஆரம்பித்தவர் பேலன்ஸ் மிஸ்ஸாகி குப்புற விழுந்ததால் அவரது வாய் உடைந்தது..

பூமிக்கு ரத்தம் கொடுத்து விட்டு பழம் கொறிக்கும் அணில் போல அமர்ந்திருந்த அவரை மீட்டு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்ட அடுத்த நிமிடமே சாலையில் மயங்கிச்சரிந்தது அந்த குடிகார குருவி.

மில்லி கொஞ்சம் ஓவராக உள்ளே போனதால் போய் சேரும் இடம் தெரியாமல் சாலையில் விழுந்து வாயை உடைத்துக் கொண்ட அந்த கில்லி, ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments