முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்: முதலமைச்சர்

0 3113

8 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்றே, ஸ்பெயினிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருப்பதாக கூறினார்.

தமது பயணத்தின்போது, ஸ்பெயின் நாட்டின் சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், அந்நாட்டு முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு நடத்த இருப்பதாக தெரிவித்த அவர், தமது பயணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்று நம்புவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments