ஜார்ஜியா நாட்டில் தந்தை விற்றுவிட்ட நிலையில் 19 வருடங்களுக்கு பிறகு டிக் டாக் மூலம் இணைந்த இரட்டையர்கள்.

0 839

ஜார்ஜியாவை சேர்ந்த இரட்டை பெண் குழந்தைகள், பிறந்த உடன் பிரிந்து சென்ற நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு டிக் டாக் செயலி வாயிலாக மீண்டும் இணைந்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு அந்த இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த உடன் தாய் மரணம் அடைந்த நிலையில், குழந்தைகளை இரு வேறு குடும்பத்தினருக்கு தந்தை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இருவரும் அண்மையில் சமூக வலைதளத்தில் தங்கள் நடனக் காட்சிகளை தனித்தனியாக பதிவிட்டனர்.

அவற்றை எதேச்சையாக பரஸ்பரம் பார்த்துக் கொண்ட அவர்கள் தாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதை உணர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments