அயோத்தி கோயிலில் இதுவரை 22 லட்சம் பேர் தரிசனம். 3 நாள் தொடர் விடுமுறையால் பக்தர் கூட்டம் அதிகரிப்பு.

0 1795

அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை 22 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக உ.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அயோத்தி ஆலயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட முதல் நாளான 23-ஆம் தேதியே 5 லட்சம் பேர் திரண்ட நிலையில், 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக சனிக்கிழமையும் கூட்டம் அதிகரித்தது.

அதிகாலை 3 மணியில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க முடியும் என்றும் உ.பி. அதிகாரிகள் கூறினர்.

கடந்த 4 நாட்களில் 20 லட்சம் பேர் ராம் லல்லாவை தரிசனம் செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்துக்குள் ராமரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments