அக்கா.. அக்கான்னு கூப்பிடுறானுங்க.. அசந்தா ஆளையே முடிச்சிடறானுங்க.. ரீல்ஸ் டீச்சரை கடத்திக் கொன்ற தம்பி..!
ரீல்ஸ் மூலம் பிரபலமான பள்ளி ஆசிரியையிடம் தம்பி உறவு முறையில் பழகிய இளைஞர் , தனது பிறந்த நாளை கொண்டாட மலைக்கோவிலுக்கு அழைத்துச்சென்று அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்சமான முகபாவனையால் ரீல்ஸ் மூலம் பிரபலமான பள்ளி ஆசிரியை தீபிகா இவர் தான்..!
கர்நாடகா மாநிலம், மாண்டியா அடுத்த மாணிக்யன ஹள்ளியைச் சேர்ந்தவர் பள்ளி ஆசியையான தீபிகாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 20ந்தேதி பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்றவர் வீடு திரும்பவில்லை. தனது மனைவியை காணவில்லை என்று கணவர் லோகேஷ் போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் காணாமல் போன தீபிகாவின் வாகனம், மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் நிற்பதை வண்டி எண்ணை வைத்து போலீசார் கண்டறிந்தனர்.
உடனடியாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீபிகாவைத் தேடும் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், மலையடிவாரத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட தீபிகாவின் உடலை போலீஸார் மீட்டனர்.
சம்பவத்தன்று தீபிகாவுடன் அவருடன் தம்பி போல பழகிய நித்தேஷ் கவுடா என்பவர் தான் ஸ்கூட்டரில் சென்றதாக கூறப்பட்ட நிலையில் ஹோஸ்பேட்டில் பதுங்கியிருந்த நித்தேஷ் கவுடாவை போலீஸார் பிடித்து விசாரித்த போது பரத் , ரீமாசென் நடித்த செல்லமே படப் பாணியில் பூத்த வில்லங்க காதலால் நிகழ்ந்த விபரீத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக தீபிகாவுடன் தம்பி உறவு முறையில் நெருங்கிப் பழகி நித்தேஷ், தீபிகாவின் ரீல்ஸ் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இது தீபிகாவின் கணவருக்கும் நன்றாகத் தெரியும். அக்கா என்று வாய் நிறைய அழைத்ததால் அவனை சின்னப் பையானாக நினைத்து, பழகி வந்ததாக கூறப்படுகிறது.
தனிமையான இடங்களில் ரீல்ஸ் எடுக்க சென்றால், தீபிகாவிடம் நித்தேஷ்ஷின் அணுகுமுறை வேறு மாதிரியாக மாறியுள்ளது. இதை கவனித்த தீபிகா, அவரிடமிருந்து ஒதுங்கியதோடு, பேசுவதையும் தவிர்த்துள்ளார். தீபிகா மீது அதீத ஈர்ப்பில் இருந்த நித்தேஷ்க்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று கூறி தீபிகாவை, மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோயிலுக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற தீபிகாவிடம் தன்னைப் பிரிந்து செல்ல வேண்டாம் என்று நித்தேஷ் கெஞ்சி அழுததாக கூறப்படுகின்றது. அப்போது அவர்களுக்குள் உண்டான சண்டையின் போது தப்பி ஓடிய தீபிகாவின் சுடிதார் ஷாலை பிடித்து இழுத்து, கழுத்தை நெரித்து நித்தேஷ் கொலை செய்ததாகவும், பின்னர் தீபிகாவின் உடலை இழுத்து வந்து மலையடிவாரத்தில் புதைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்
இந்த நிலையில், அவர்கள் சண்டையிட்ட வீடியோவை தூரத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எடுத்து போலீஸாருக்கு அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ ஆதாரத்தை காட்டியதும் , தான் கொலை செய்ததை நித்தேஷ் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அக்கா அக்கா என்று அழைத்து பழகி விட்டு ஆளில்லா இடத்தில் அத்துமீறிய வில்லங்க தம்பியால் ரீல்ஸ் பிரபலம் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம், தக்ஷின கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments