அதிருப்தி காரணமாக இண்டியா கூட்டணியில் இருந்து விலக நிதீஷ் குமார் முடிவு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக இண்டியா கூட்டணி கட்சிகள் மீதும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடனும் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்கும் முடிவில் நிதீஷ் குமார் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இண்டியா கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு சரியான மரியாதை அளிக்காமல் அவமானப்படுத்தப்பட்டதாக ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஆட்சி அமைக்க சட்டப்பேரவையில் 122 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு 78, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் ஆட்சி அமைக்க எந்தச் சிக்கலும் இல்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
லாலுவின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள், சுயேட்சைகள் என மற்றவர்களை ஒன்று திரட்டினாலும், 120 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை கிடைக்காது.
Comments