வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது: ரஷ்ய அதிபர் புதின்

0 898

பிரதமர் மோடியின் தலைமைப் பண்பால் உலகளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கலினின்கிராட் மாகாணத்தில் மாணவர் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், கடினமான இன்றைய சூழலிலும் கூட சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேக் இன் இந்தியா முன்னெடுப்புக்கு பாராட்டு தெரிவித்த புதின், ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

சிறந்த கலாச்சாரத்தை இந்தியா கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், ரஷ்ய தொலைக்காட்சியில் இந்திய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments