அமெரிக்கா, கனடாவில் பனிப்பொழிவால் மெக்சிகோ நாட்டு வனப்பகுதிகளில் தஞ்சம் அடையும் பட்டாம்பூச்சிகள்
குளிர் காலத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் பனிப்பொழிவில் இருந்து தற்காத்துக்கொள்ள, லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்து மெக்சிகோ வனப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தன.
அவ்வாறு தஞ்சமடையும் பட்டாம்பூச்சிகளுக்கு உரிய சூழல் அமையும் வகையில் மெக்சிகோவில் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கால நிலை மாற்றத்தால், பட்டாம்பூச்சிகளை அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments