திமுக எம்.பி கலாநிதி வீராசாமி - பா.ஜ.க நிர்வாகி அலிஷா அப்துல்லா தரப்புக்கிடையே கார் பார்க்கிங் பிரச்சனை

0 1113

சென்னை அண்ணா நகரில் குடியிருப்பு ஒன்றில் கார் பார்க்கிங் தொடர்பாக நடந்த பிரச்னை தொடர்பாக, பாஜக மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டவர்கள் தங்களிடம் பிரச்னை செய்ததாக அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அலிஷா அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கலாநிதி வீராசாமி தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments