கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசின் கொள்கைக் குறிப்பின் கடைசிப் பத்தியை மட்டும் படித்துவிட்டு வெளியேறிய ஆளுநர்
கேரள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கிவைத்த ஆளுநர் ஆரிப் முகமது கான், அரசின் கொள்கை அறிவிப்பு அறிக்கையின் கடைசிப் பத்தியை மட்டும் படித்துவிட்டு அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, அவையில் இருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், கூட்டத் தொடரை தொடங்கிவைப்பதாகவும், அறிக்கையின் கடைசிப் பத்தியைப் படிக்கப்போகிறேன் என்றும் கூறி, இரண்டு நிமிடங்களுக்குள் படித்துவிட்டு வெளியேறினார்.
ஆளுநரின் செயல் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவையை ஆளுநர் அவமரியாதை செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சதீஸன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய கலாசார துறை அமைச்சர் சஜி செரியன், ஆளுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
Comments