காவல் மற்றும் தீயணைப்புத்துறையின் வீரதீர செயலுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
வீர தீரச் செயல்களில் ஈடுபட்ட காவல், தீயணைப்பு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஆயிரத்து 132 பேருக்கு குடியரசுத் தினத்தன்று காவல் பதக்கங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் சன்வாலா ராம் விஷ்னோய், ஷிஷு பால் சிங் ஆகியோருக்கு மரணத்துக்குப் பிறகான குடியரசுத் தலைவரின் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
275 பேருக்கு வீரதீர செயலுக்கான பதக்கமும், 102 பேருக்கு சிறந்த காவல் பணிக்கான பதக்கமும், 753 பேருக்கு மெச்சத்தக்க பணிக்கான பதக்கமும் வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஜி லலிதா லட்சுமி, கமான்டண்ட் ராஜசேகரன், எஸ்.ஐ. ராயப்பன் ஆகியோருக்கு சிறந்த காவல் பணிக்கான பதக்கமும், மேலும் 24 பேருக்கு மெச்சத்தக்க பணிக்கான பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
Comments