ஹைதராபாத்தில் முன்னாள் இயக்குநர் பாலகிருஷ்ணா வீட்டில் ரூ.80 லட்சம் பணம், ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்
ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் குழும முன்னாள் இயக்குநர் பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரொக்கம், தங்க நகைகள், ஏராளமான செல்போன்கள், கைக்கடிகாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லஞ்ச புகாரை அடுத்து 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் பாலகிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணக்கில்வராத 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்கள் சோதனையில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments