அயோத்தி ராமர் கோவிலில் நேற்று ஒரே நாளில் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் - கூட்ட நெரிசலை முறைப்படுத்த முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை
அயோத்தி ராமர் கோவிலில் நேற்று ஒரே நாளில் சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களால் மூன்று கோடி ரூபாய்க்கும் மேலாக காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டத்தை முறைப்படுத்த திட்டமிட்டார்.
விஐபிக்கள் வருகையை கோவில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். முதல் நாளில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டதால் பாதுகாப்புக்கு சவாலாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க தரிசன நேரத்தை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments