கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்துதார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பில், 62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.
10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பூவந்தி அபி சித்தருக்கு கார் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. சிறப்பாக களமாடிய புதுக்கோட்டை கணேஷ் கருப்பையாவின் காளைக்கு கார் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நிறைவடைந்த பின்னர் ஏறுதழுவுதல் அரங்கம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.
Comments