உக்ரைன் எல்லை அருகே சிறை கைதிகள் 65 பேருடன் விழுந்து நொறுங்கிய ரஷ்ய ராணுவ விமானம்

0 601

உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம், ரஷ்யாவின் பெல்கரோட் நகரில் விழுந்து நொறுங்கியது.

இதில் பலர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரஷ்ய படைகளால் சிறை பிடிக்கப்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் 65 பேரை, போர் கைதிகள் பரிமாற்றத்துக்காக அழைத்து செல்லப்பட்டபோது, உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பெல்கிரோட் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியது.

சிறை கைதிகள் அழைத்து வரப்படுவது குறித்து உக்ரைனுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தும், உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தங்கள் நாட்டு வீரர்கள் பயணித்த விமானத்தையே சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments