தமிழகத்தில் காலச்சக்கர மாற்றம் நிகழ்ந்து வருகிறது: அண்ணாமலை

0 717

தமிழகத்தில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை யாரும் பார்க்க முடியாமல் தடுக்க வேண்டுமென தி.மு.க. அரசு நினைத்த போதிலும் காலச்சக்கர மாற்றத்தால் அதனை பா.ஜ.க. நடத்தி காட்டியதாக அண்ணாமலை தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் என் மண் என் மக்கள் யாத்திரையில் இதனை அண்ணாமலை கூறினார்.

அடுத்தக் கட்ட தலைவர்களை பா.ஜ.க. உருவாக்கி வரும் நிலையில், தி.மு.க.வின் சேலம் மாநாடு குடும்பத்திற்கான மாநாடாக நடைபெற்றதாக அண்ணாமலை கூறினார்.

காவிரி பிரச்னையில் 2007 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகே 2018 ஆம் ஆண்டில் அரசாணையாக வெளியிட்டு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதாகவும், கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த வரை காவிரி பிரச்னை எழவே இல்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments