ஒரு வளர்ச்சித் திட்டத்தையாவது காட்டமுடியுமா ? ஆந்திர முதலமைச்சருக்கு ஒய்.எஸ்.ஷர்மிளா சவால்

0 805

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஆந்திர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட ஒய்.எஸ். ஷர்மிளா தமது சகோதரரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வளர்ச்சித் திட்டத்தையாவது ஜெகன்மோகன் அரசு நிறைவேற்றியதா என்று கேள்வியெழுப்பிய அவர், பாஜகவின் கைபொம்மையாக ஜெகன்மோகன் இருப்பதாக விமர்சித்தார்.

தமது தந்தை ராஜசேகரரெட்டி பாஜகவை தீவிரமாக எதிர்த்தவர் என்றும் அவர் தெரிவித்தார்.

9 நாள் சுற்றுப்பயணத்தை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இருந்து தொடங்கிய ஷர்மிளா, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோர ஒருமுறைகூட ஜெகன்மோகன் முயற்சிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments