அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளும் பக்தர்கள்..
அயோத்தி ராம் லல்லா ஆலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிராண பிரதிஷ்டை முடிவடைந்த பின் குழந்தை ராமரை தரிசிக்க நள்ளிரவு முதல் ஏராளமானோர் காத்திருந்து காலை முதல் தரிசனம் மேற்கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
லதா மங்கேஷ்கர் சவுக் மற்றும் ராம் பாதை இடையேயான 13 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்ததாக உ.பி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயோத்திக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் நிலைமையை ஆய்வு செய்தார்.
பக்தர்கள் எவ்வித பிரசச்சினையுமின்றி தரிசனம் செய்ய 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உ.பி. அரசு கூறியுள்ளது.
Comments