பேருந்துக்கு வழிவிடாத இளைஞன் - தட்டிக்கேட்ட ஓட்டுநர் மீது தாக்குதல்

0 984

விருத்தாசலத்தில் மது போதை ஆசாமிகள் அரசுப் பணிமனைக்குள் புகுந்து ஓட்டுநரைத் தாக்கிய நிலையில், பணிமனையை மூடி சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையத்தின் வெளியேறும் பகுதியில் இளைஞன் ஒருவன் தனது பைக்கை குறுக்கே நிறுத்திவிட்டு, செல்போன் பார்த்தபடி இருந்துள்ளான். அவனை அங்கிருந்து நகருமாறு அரசுப் பேருந்து ஓட்டுநர் மோகன் என்பவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தவன் பணிமனைக்குச் சென்ற மோகனை கூட்டாளிகள் 3 பேருடன் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. 4 பேரையும் மடக்கிப் பிடித்த சக ஓட்டுநர்கள், பணிமனையின் நுழைவுவாயிலை மூடிவிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சென்ற போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments