காலை 7 - 11.30 மணி வரை, பிற்பகல் 2 - இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி
பிராண பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில், செவ்வாய்கிழமை முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.
காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசனம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் சிறப்பு பூஜைகளும் ஆரத்தி நிகழ்ச்சியும் நடைபெறும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கும், ஆரத்தியில் பங்கேற்கவும் இணையதளத்தில் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், உரிய அடையாள ஆவணத்தை காண்பித்து முகாம் அலுவலகங்களில் அனுமதி சீட்டை பெறலாம் என்றும் அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது
Comments