அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை - வழிபாடு

0 711

அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பஜனை நடைபெற்றது.

கோவை, புது சித்தா புதூரில் முத்துமாரியம்மன் கோயிலில் ராமர் பாடல்களை பாடி பக்தர்கள் பஜனை செய்தனர். குழந்தைகள் ராமர், சீதை வேடமிட்டு நடமாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாடிச்சி விளை பகுதியில் உள்ள கோவிலில் ராமர், சீதா லட்சுமணன் சிலைகளை, வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு ஏராளமான ராம பக்தர்கள் ஒன்று கூடி பஜனையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments