உலகை அடுத்து தாக்க இருக்கும் 'எக்ஸ்' பெருந்தொற்றை கண்டரிந்த உலக சுகாதார நிறுவனம்
அடுத்து உலகை தாக்கக்கூடும் என அஞ்சப்படும் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானதாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் பேரழிவை உருவாக்கும் சாத்தியங்களை கொண்ட கிருமிகளின் பட்டியலை தயாரித்த உலக சுகாதார மையம், அதனால் பரவக்கூடிய பெருந்தொற்றுக்கு எக்ஸ் என பெயரிட்டுள்ளது.
உலக பொருளாதார மன்றத்தில் இதுகுறித்து உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், புதிய பெருந்தொற்றை சமாளிக்க அனைத்து நாடுகளும் தங்களுக்குள் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Comments