அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழக கோயில்களில் சிறப்பு பூஜை..

0 650

அயோத்திர ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் அபய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில் இருந்து ராமர் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி அருகிலுள்ள ஸ்ரீ வராகர் திருக்கோவிலுக்கு புறப்பாடு நடைபெற்றது. ராமருக்கு ஆயிரத்து எட்டு விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர்.

நெல்லையில் ஸ்ரீ லெஷ்மி நரசிங்க பெருமாள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் கருடசேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.  

புதுச்சேரி அருகே பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ராமர் சீதா தேவிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments