முன்மொழிந்த 25 தீர்மானங்கள்... முதலமைச்சரின் முக்கிய பேச்சுகள்.. இளைஞர்களுக்கு வாய்ப்பு கேட்ட உதயநிதி...! தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டின் ஹைலைட்ஸ்கள்

0 1033

மக்களவை தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. தொடங்கிவிட்டதாகவும், யார் வெற்றிபெறுவார்களோ அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இளைஞரணி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்த 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு கேடயமும், வாளையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அதேபோல் இருவருக்கும் கட்சி நிர்வாகிகள் வெள்ளி செங்கோலை வழங்கினர்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், மாநில அரசுகளிடம் எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு சட்டங்களை கொண்டு வருவதாக தெரிவித்தார். பலமுறை வெள்ள நிவாரண நிதி கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக பேசிய அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தார்.

மாநாட்டில் பங்கேற்ற திமுக கொண்டர்களுக்கு 50 ஆயிரம் கிலோ மட்டன், 50 ஆயிரம் கிலோ சிக்கனுடன் பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டது. மதிய வேளையில் விநியோகிக்கப்பட்ட பிரியாணியை போட்டிப்போட்டு தொண்டர்கள் வாங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments