ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நிகழ்வை நாடு முழுவதும் காண ஏற்பாடு. பொது இடங்களில் எல்சிடி திரைகள் அமைப்பு..

0 968

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்து உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் வழிபட ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

அயோத்தியில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் நாடு முழுவதும் கோயில்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் எல்சிடி திரைகள் அமைத்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பக்தர்கள் பார்வையிட வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தமிழக பாரம்பரிய இசைக் கருவிகள் உள்பட 50 இசைக் கருவிகளை அயோத்தி கோயிலில், காலை 10 மணி முதல் பகல் 12 மணி இசைத்து மங்கல ஒலி வழிபாடு நடத்தப்படுகிறது.

இதனையடுத்து பிற்பகல் 12.29 மணிமுதல் 12.30 வரை குழந்தை வடிவ ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments