கோவை ராமநாதபுரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீநரசிங்கப்பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு

0 797

கோவை ராமநாதபுரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீநரசிங்கப்பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பக்தர்கள் ஸ்ரீராமஜெயம், ராமநவமி பாடல்கள் பாடியும், கோவிந்தா கோஷத்துடனும் தரிசனம் செய்தனர்.

திருச்சி கல்லுக்குழியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கில் ஏராளமானவர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வல்லமங்கலத்தில் சிதிலடைந்திருந்த விசாலாட்சி உடனுறை விஸ்வநாநர் ஆலயம் புனரமைக்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டது.

நெல்லை மேலரத வீதியில் உள்ள ஸ்ரீலெஷ்மி நரசிங்க பெருமாள் கோயில்,திருவண்ணாமலை மாவட்டம் காரணை கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன்  ஆலயம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நம்பம்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்களும் குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments