ஆன்மீக பயணத்தை நிறைவு செய்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றார் பிரதமர்

0 764

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் சனிக்கிழமை வழிபாடு செய்த பிரதமர் மோடி, இன்று அரிச்சல் முனை மற்றும் கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

ராமகிருஷ்ண மடத்தில் இருந்து காலையில் சாலை மார்கமாக அரிச்சல் முனைக்கு புறப்பட்ட பிரதமருக்கு, வழிநெடுகிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

அரிச்சல் முனையில் தேசிய சின்னம் ஏந்திய தூணிற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பிரதமர், தொலைநோக்கி உதவியுடன் கடல் அழகை கண்டு ரசித்தார்.

கடற்கரையில் வண்ண மலர்களை தூவி வழிபாடு செய்து, கடல் முன் அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனையிலும் அவர் ஈடுபட்டார். 

இதனைத் தொடர்ந்து, தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலுக்கு சென்ற பிரதமர், சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்ற பிரதமர், அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments