பாப் பாடல்களை பார்த்த 2 வடகொரியா மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை

0 1179


வடகொரியாவில், தென்கொரிய நாட்டு பாப் பாடல்களை பார்த்த பதின்பருவ சிறுவர்கள் 2 பேருக்கு 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தென்கொரிய நாட்டு திரைப்படங்களையும், பாடல் வீடியோக்களையும் பார்ப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை வடகொரிய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு இயற்றியது.

இந்நிலையில், 3 மாதங்களாக தென்கொரிய நாட்டு பாடல் வீடியோக்களை பார்த்துவந்த குற்றச்சாட்டில் கைதான 2 பள்ளி மாணவர்களுக்கு, திறந்தவெளி திரையரங்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில், 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டு மக்களை அச்சுறுத்துவதற்காக வடகொரிய அரசு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக அரசியல் நிபுனர்கள் விமர்சித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments