எங்களுக்கு நியாயம் வேணும் சாமி.. நீட் படிக்க வைப்பதாக இப்படியா ? எம்.எல்.ஏ மகன் வீட்டில் நடந்தது என்ன..? வீட்டில் சிறுமி நடனமாடிய பின்னணி

0 1937

பல்லாவரம் திமுக எம்.எல். ஏ வின் மருமகள், சூடுவைத்து சித்ரவதை செய்ததாக வீட்டில் வேலைபார்த்த சிறுமி புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

பல்லவாரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகளால் , தனது மகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டாதாக கூறி சிறுமியின் தாய் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் தான் இவை..!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் , 12 ஆம் வகுப்பில் 600க்கும் 433 மதிப்பெண் எடுத்த நிலையில் நீட் தேர்வு பயிற்சிக்கு பணம் தேவை பட்டதால், வறுமை காரணமாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகனான, அண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்ந்ததாகவும், பணிக்கு சேர்ந்த நாள் முதல் பல்வேறு கொடுமைக்குள்ளாகியதாக எம்.எல்.ஏ மருமகள் மார்லீனா மீது குற்றஞ்சாட்டிய சிறுமி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் அண்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லீனா மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுமி தனக்கு சூடு வைத்து, மிளகாய்பொடியை கரைத்து குடிக்கவைத்து வேலை வாங்கியதோடு, கீழே படுக்கவைத்து காலால் மிதித்து உடல் முழுவதும் அடித்து கொடுமை படுத்தியதாக வேதனை தெரிவித்தார்

தனக்கு சூடு போட்ட தழும்புகளை மறைக்க மருதாணி கோன் வாங்கி கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டிய அந்த சிறுமி
தன்னை நீட் படிக்கவைப்பதாக கூறி ஏமாற்றிவிட்டனர் என்றும் கொடுமையை தாங்க முடியாமல் இதனை வெளியில் சொல்லிருப்பதாக தெரிவித்தார்

தனது மகளுக்கு எம்.எல்.ஏ மருமகளால் நிகழ்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க விவரித்த சிறுமியின் தாய்
தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி தங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்ததாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் எம்.எல்.ஏவின் மகன் அண்டோ

தாங்கள் எங்கு சென்றாலும் அவரையும் அழைத்துச்சென்றதாகவும், குடும்பத்தில் ஒருவர் போல சிறுமியை பார்த்துக் கொணட நிலையில் உள் நோக்கத்துடன் தங்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments