பிரதமரின் வருகையையொட்டி முக்கிய பகுதிகளில் 3,400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3 ஆயிரத்து 700 போலீசாருடன்5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து காலை 10.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை மைதானத்தில் இறங்குகிறார்.
இன்று மாலை 6:00 மணி முதல் ஸ்ரீரங்கத்தில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.
ஸ்ரீரங்கம் தரிசனத்தை முடித்துக்கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நாளை ராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில், பேக்கரும்பிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு, ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.
பிரதமரின் வருகையால் ராமநாதசுவாமி கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள 3 ஆயிரத்து 400 போலீசார் தங்குவதற்காக 12 அரசுப் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வித்துறை சார்பில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Comments