அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை தினத்தில் நாடு முழுவதும் ராமர் ஜோதி ஏற்ற வேண்டும் - பிரதமர்

0 854

அயோத்தியில் ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா நடைபெறும் ஜனவரி 22 ஆம் தேதியன்று நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் ராமர் ஜோதி ஏற்றி வழிபாடு நடத்த பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர், ஒவ்வொரு இல்லமும் செழிப்படைய பிரார்த்திக்க வேண்டும் எனவும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் வங்கி கணக்குகளில் 30 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்தியுள்ளதாக மோடி தெரிவித்தார்.

வறுமை ஒழிப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்துவருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments