சேலத்தில் ரூ.129.20 கோடி செலவில் 700 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என். நேரு
சேலத்தில் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் 129 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 700 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்து, வாகனப் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேம்பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நேரு, தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரயில்வே கேட் மூடப்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த முள்ளுவாடி மேம்பால கட்டுமானப்பணிகள் முழுவதுமாக நிறைவுபெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Comments