நான்காவது மாதத்தை எட்டியது இஸ்ரேல்-ஹமாஸ் போர்... கான் யூனிஸ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீச்சு

0 798

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நான்காவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு சண்டை தீவிரமடைந்துள்ளது.

வடக்கு காஸாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கானனோர் கான் யூனிஸில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்திவருகிறது.

அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறிவிட்டனர். பீரங்கி மற்றும் வான்வழி தாக்குதலின் துணையோடு கடந்த 24 மணி நேரத்தில் 60 ஹமாஸ் போராளிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments