பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு திட்டவட்டம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி, இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலுக்கு 4-வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே அமைதி திரும்புவதற்கான ஒரே வழி என வலியுறுத்தினார்.
அதனை ஏற்க மறுத்த நேதன்யாஹு, பாலஸ்தீனம் என ஒன்று இருந்தால் அது, யூதர்களுக்கென தனி நாடாக இஸ்ரேல் இருப்பதற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
Comments