சின்னகுயிலுக்கு எதிர்ப்பு... ராமர் மந்திரம் சொன்னால் தப்பா ? பட்டையை கிளப்பிய குஷ்பு ..!
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா அன்று ராமர் மந்திரத்தை கூறச்சொல்லி வீடியோ வெளியிட்ட பிரபல பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு , மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, பாடகர் வேணுகோபால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
இந்த வீடியோ தாங்க, பாடகி சின்னக்குயில் சித்ரா மீதான எதிர்ப்புக்கு காரணம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ராமரை மனதார நினைத்து வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து பிரபல பாடகி கே.எஸ். சித்ராவும் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதியன்று நண்பகல் 12.20 மணிக்கு "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" எனும் ராமரின் மந்திரத்தை அனைவரும் உச்சரித்து வழிபடுங்கள் என்று கூறியிருந்தார். அதோடு, அன்றைய தினம் மாலை ஐந்து முக விளக்குகளை வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏற்றி வைத்து ராமரின் நல்லாசியை பெறுங்கள் என்றும் அந்த சித்ரா வீடியோவில் தெரிவித்திருந்தார்.
சித்ராவின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், ஒரு சிலர் இதை வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். மலையாள பாடகர் சூரஜ் சந்தோஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இன்னும் எத்தனை அடையாளங்கள் அழிக்கப்பட உள்ளனவோ என்றும் சித்ரா போன்ற இன்னும் எத்தனை முகங்கள் வெளிவர உள்ளனவோ ? என்றும் சாடியுள்ளார். அதே சமயம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு, பாடகர் வேணுகோபால், பாஜக தலைவர் சுரேந்திரன், உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சித்ராவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
Comments