நகராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கைவிடப்பட்டது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், கூட்டத்தில் போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால் கைவிடப்பட்டது.
சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்த ராமலட்சுமி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு தலைவரானார்.
பின்னர், சில மாதங்களுக்கு முன் அவர் தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட 19 கவுன்சிலர்கள் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அளித்திருந்தனர்.
இதன்பேரில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர்கள் 13 பேர் மட்டும் பங்கேற்றிருந்தனர். குறைந்தபட்சம் 20 கவுன்சிலர்கள் இருந்தால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும் என்ற விதி உள்ள நிலையில், போதிய உறுப்பினர்கள் இல்லாததால், தீர்மானம் கைவிடப்பட்டது.
Comments